அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சட்டத்தரணி லத்தீப் கடமையேற்பு !

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளராக இன்று 2019-04-10 கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

பொது நிருவாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள இவர் கடந்த 2006 ம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.

ஆரம்பத்தில் உதவிப்பிரதேச செயலாளராக இணைந்து கொண்ட இவர், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளதோடு, அக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர்களாக கடமையாற்றிய எம்.ஐ.ஏ. அமீர் மற்றும் கே.விமலநாதன் ஆகியோர்கள் பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச்சென்றதையடுத்தே இந்த இடத்திற்கு ஏ.எம். அப்துல் லத்தீப் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய வி. ஜெகதீசன் ஆகியோரும் அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர்களாக கடமைப்பொறுப்பேற்றுள்ளனர்.

பதவியுயர்வு பெற்றுச்சென்ற அம்பாறை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களை நிந்தவூர் பிரதேச செயலகம் வாழ்த்தி வழியனுப்புகிறது.

4

5

21

20

3

21

18

1

News & Events

20
Apr2019
பிரியாவிடை நிகழ்வும் சேவைநலன் பாராட்டு விழாவும்

பிரியாவிடை நிகழ்வும் சேவைநலன் பாராட்டு விழாவும்

பிரியாவிடை நிகழ்வும் சேவைநலன் பாராட்டு விழாவும் நிந்தவூர் பிரதேச...

19
Apr2019
இரத்த தான முகாம்

இரத்த தான முகாம்

நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (2019.04.17)...

Scroll To Top